நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு டாக்டரின் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை பெத்து செட்டிப்பேட் சுப்ரமணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத், 42; புதுச்சேரி அரசு மருத்துவமனை டாக்டர். கடந்த 2ம் தேதி அமர்நாத் வழக்கம் போல் தனது பைக்கில் பணிக்கு சென்றார்.
பைக்கை ஆர்.எம்.ஓ., அலுவலகம் எதிரே நிறுத்திவிட்டு சென்றார். மதியம் 3:00 மணியளவில் பணியை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அவர் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

