நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ், 19; இவர் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.
கடந்த 13ம் தேதி இவரது தந்தையின் பைக்கை எடுத்து கொண்டு, தந்தை பெரியார் நகரில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். வீட்டு முன்பு நிறுத்திருந்த பைக்கை மறுநாள் காலையில் பார்த்த போது பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.