நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடையில் வாசல் முன்பு நிறுத்தியிருந்த போட்டோகிராபரின் பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன்,23; போட்டோகிராபராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி கடையில் தனது பைக்கை நிறுத்தினார். வேலையை முடித்துவிட்டு வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் பைக் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.