ADDED : ஜூலை 14, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பல்கலைகழக மாணவரின் பைக் திருடு போனது குறித்து, காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக உள்ளவர் மோனு. இவர் பிள்ளைச்சாவடி பான்லே பால் பூத் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்து, பல்கலைகழகத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். கடந்த மாதம் 10ம் இரவு இவரது வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடு போனது தெரிந்தது. இது குறித்து புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
