தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு

மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு

மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு


ADDED : ஜூலை 14, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: புதுச்சேரி, ஆம்பூர் சாலை, புஸ்சி வீதி சந்திப்பில், திடீரென மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஆம்பூர் சாலை, புஸ்சி வீதி சந்திப்பில் நேற்ற காலை 10.40 மணியளவில் பழமையான புன்னை மரம் ஒன்று திடீரென சாலையில் குறுக்கே வேரோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில், அங்கு நிறுத்தியிருந்த டெம்போ சேதமடைந்தது.

இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சேரி தீயணைப்பு துறையினர், நிலைய அதிகாரி சுகுமார் தலைமையில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை வெட்டி அகற்றினர்.

இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரது பாதிக்கப்பட்டது. எப்போதும் பிசியாக காணப்படும் சாலையில் திடீரென மரம் வேரோடு சாய்ந்தது அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us