/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சிவன் கோவில் உண்டியல் திருட்டு
/
ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சிவன் கோவில் உண்டியல் திருட்டு
ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சிவன் கோவில் உண்டியல் திருட்டு
ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சிவன் கோவில் உண்டியல் திருட்டு
ADDED : ஜூலை 06, 2024 04:28 AM
காரைக்கால்: காரைக்காலில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உண்டியல் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற நெடுந்துயர் தீர்த்த நாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டது.
இக்கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பட்டில் உள்ளது. இக்கோவிலில் நெடுங்காடு காமராஜர் சாலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி வழக்கம் போல இரவு கோவில் நடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, கோவில் திறக்கப்பட்ட கிடந்தது. உள்ளே கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை திருடப்பட்டது தெரியவந்தது.
புகாரின் பேரில், நெடுங்காடு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். போலீசார் தடையவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தனர்.