/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'போக்சோ' வழக்கு கைதிக்கும் சிறையில் பிரியாணி விருந்து? தவறாக செய்தி பரப்பியர் மீது வழக்கு
/
'போக்சோ' வழக்கு கைதிக்கும் சிறையில் பிரியாணி விருந்து? தவறாக செய்தி பரப்பியர் மீது வழக்கு
'போக்சோ' வழக்கு கைதிக்கும் சிறையில் பிரியாணி விருந்து? தவறாக செய்தி பரப்பியர் மீது வழக்கு
'போக்சோ' வழக்கு கைதிக்கும் சிறையில் பிரியாணி விருந்து? தவறாக செய்தி பரப்பியர் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 09:06 PM
காரைக்கால்: காரைக்கால் சிறையில் போக்சோ வழக்கில் சிறையில் உள்ள கைதிக்கு வெளி உணவு வழங்கவில்லை என்று சில விஷகிருமிகள் கைதிக்கு பிரியாணி விருந்து என்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரப்பியதால் பரப்பரப்பு..
காரைக்கால் மதகடியில் உள்ள தனிக்கிளை சிறையில் கொலை, கொள்ளை,திருட்டு,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவத்தில் ஈடுப்பட்ட தண்டனை கைதி,விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த 21வயது கொண்ட வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது போலீசார் போக்சோ வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறையில் உள்ள யாரிடமும் பேசுவதில்லை. இதனால் அவரது குடும்பத்தில் உள்ள நபர்களிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சிறையில் உள்ள அவருக்கு உறவினர்கள் வீட்டில் சமையல் செய்த பிரியாணி மற்றும் பழங்களுடன் சிறைக்கு வந்துள்ளார்.
அப்போது சிறை அதிகாரிகள் குற்றவாளிக்கு வெளியில் கொண்டுவரும் உணவு வழங்க மறுத்துள்ளனர்.இதனால் சில விஷகிருமிகள் அதிகாரிகளுக்கு இடையோ ஏற்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக சிறையில் கைதிக்கு பிரியாணி விருந்து என்று சமூக வலைத்தளத்தில் வைரலாக்கியுள்ளனர்.
இதுக்குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்.,கைதிகளுக்கு வெளியில் கொண்டுவரும் உணவு வழங்க அனுமதி இல்லை உறவினர்கள் கொண்டுவரும் பழங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார். கைதிக்கு பிரியாணி விருந்து என தவறாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.