/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
/
பா.ஜ., கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : மார் 30, 2024 06:44 AM

புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.
பா.ஜ.க., எம்.எல்.ஏ., ரிச்சர்ட் ஜான்குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ.க., என். ஆர்.காங்., பா.ம.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

