/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., வேட்பாளர் அறிமுக கூட்டம்
/
பா.ஜ., வேட்பாளர் அறிமுக கூட்டம்
ADDED : ஏப் 05, 2024 05:23 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்., சார்பில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் அறிமுக கூட்டம் நடந்தது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளராக நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்., கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம், இ.சி.ஆரில் உள்ள என்.ஆர்.காங்., கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கட்சியின் செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார். வேட்பாளர் நமச்சிவாயம் பங்கேற்று பேசினார்.
பா.ஜ., வேட்பாளரை அமோகமாக வெற்றி பெற செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் கோபி மற்றும் என்.ஆர். காங்., - பா.ஜ., - பா.ம.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

