/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய- மாநில அரசுக்கு பாலமாக இருப்பேன் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் உறுதி
/
மத்திய- மாநில அரசுக்கு பாலமாக இருப்பேன் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் உறுதி
மத்திய- மாநில அரசுக்கு பாலமாக இருப்பேன் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் உறுதி
மத்திய- மாநில அரசுக்கு பாலமாக இருப்பேன் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் உறுதி
ADDED : ஏப் 16, 2024 06:05 AM
புதுச்சேரி, : மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய இணக்கான ஆட்சி இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சிபெறும் என பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் பேசினார்.
புதுச்சேரி அண்ணாசாலையில் பா.ஜ.,சார்பில் நேற்று நடந்த ரோடு ேஷாவில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசியதாவது:
இந்த லோக்சபா தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். முன்பெல்லாம் பிரதமரை தேர்வு செய்ய ஓட்டுபோடுவோம்.
இந்த தேர்தல் வித்தியாசமானது. பிரதமரை தேர்ந்தெடுத்து ஓட்டுபோட போகிறோம். இந்த தேர்தல் பா.ஜ.,விற்கு ஏன் ஓட்டு போட வேண்டும்; காங்., கட்சிக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது என்ற இரண்டு கேள்விகளை மக்கள் முன் வைக்கின்றேன்.
கொரோனாவினால் உலகம் முழுவதும் கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர். இந்த சூழ்நிலையை உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு பிரதமர் திறமையாக கையாண்டு இந்தியாவின் நன்மதிப்பினை உயர்த்தினார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பு பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், அனைத்து மக்களுக்கும் இலவசமாக அளித்து உயிரை காப்பாற்றினார். எனவே மோடிக்கு ஓட்டுபோட்டு அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வரவில்லை.
பார்லிமெண்ட்டிற்கு போவதே எரிச்சலாக இருக்கு என்று வைத்திலிங்கம் சொல்லுகிறார். இப்படி பட்டவருக்கு மீண்டும் ஓட்டு போட்டால் மாநில வளர்ச்சி என்ன ஆகும் என்பதை சிந்தித்துபார்த்து தாமரைக்கு ஓட்டுபோட வேண்டும்.
மத்தியிலும்,மாநிலத்திலும் ஒரே கருத்துடைய இணக்கான ஆட்சி இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சிபெறும். என்னை தேர்வு செய்து அனுப்பினால், மத்திய மாநில அரசுக்கு உறவுபாலமாக இருப்பேன். உங்களின் மனச்சாட்சியாக குரல்கொடுத்து, மாநில வளர்ச்சியை மேம்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

