/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு
/
பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு
பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு
பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு
ADDED : ஏப் 20, 2024 04:45 AM
நெட்டப்பாக்கம், : ஏரிப்பாக்கத்தில் ஓட்டுப் பதிவின் போது பா.ஜ., மற்றும் காங்., நிர்வாகிகள் திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள 5ம் எண் ஓட்டுச் சாவடியில் காலை 7:00 மணிக்கு, ஒட்டுப்பதிவு செய்ய அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஆனால், அங்கிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக 30 நிமிடம் தாமதமாக 7:30 மணிக்கு மேல் தான் ஓட்டுப் பதிவு துவங்கியது. காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சொந்த தொகுதியான நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள மடுகரையில் காலை 11:30 மணிக்கு ஒட்டு போட்டார்.
மாலை 4:30 மணிக்கு ஏரிப்பாக்கம் ஓட்டுச் சாவடியில் பொது மக்களிடம் ஓட்டு கேட்டபோது, பா.ஜ., மற்றும் காங்., நிர்வாகிகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களை நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.