/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 21, 2024 07:56 AM

புதுச்சேரி, : புதுச்சேரி பா.ஜ., அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கை நடத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில கட்சி தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார்.பா.ஜ., தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தேசிய அமைப்பாளர் அமித்மால்வியா, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடத்ததுல் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி மாநில உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளரான ஆந்திர மாநில தலைவர் பகுபதி புரந்தேஸ்வரி சிறப்புரையாற் றினார்.
மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல். ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.