/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நட்டாவுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு அமைச்சர்களை மாற்ற கோரிக்கை
/
நட்டாவுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு அமைச்சர்களை மாற்ற கோரிக்கை
நட்டாவுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு அமைச்சர்களை மாற்ற கோரிக்கை
நட்டாவுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு அமைச்சர்களை மாற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 03:29 AM

புதுச்சேரி : டில்லியில் முகாமிட்டுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, புதுச்சேரி அமைச்சர்களை மாற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தார்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருகின்ற சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதையடுத்து, கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து புகார் தெரிவிக்க கடந்த 1ம் தேதி டில்லிக்கு பறந்தனர்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை நேற்று சந்தித்து, அமைச்சர்களை மாற்ற வேண்டும், பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர்.
ஆனால், உத்தரபிரதேச உயிரிழப்புகள் தொடர்பாக பார்வையிட அமித்ஷா அங்கு சென்றதால், அவரை சந்திக்க முடியவில்லை.
இன்று 4ம் தேதி, பா.ஜ., அமைப்பு செயலர் சந்தோஷை சந்திக்க 7 எம்.எல்.ஏ.,க்களும், செல்வகணபதி எம்.பி.,யுடன் டில்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.