/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராகுலை கண்டித்து பா.ஜ., தீர்மானம்
/
ராகுலை கண்டித்து பா.ஜ., தீர்மானம்
ADDED : ஜூலை 15, 2024 02:11 AM
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சிறப்பு செயற்குழு கூட்டத்தில், இந்துக்களை அவமானப்படுத்தியதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மாநில பா.ஜ., சிறப்பு செயற்குழு கூட்டம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார்.
நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளில் அதிக காலம், ஆட்சி அதிகாரத்தில் காங்., இருந்தது.
காங்., கட்சியினர் குடும்ப நலன் மட்டுமே முக்கியம் எனசெயல்பட்டதால்,அனைத்து துறைகளிலும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மிகுந்து காணப்பட்டது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில், காங்., கட்சிக்கு 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலையை, உருவாக்கினர்.
நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் துணையோடு, 'இண்டியா கூட்டணி' என்ற பெயருடன், கடந்த தேர்தலில் போட்டியிட்டு, 99 இடங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது.
லோக்சபாவில் நாட்டு மக்களை திசை திருப்ப, அப்பட்டமான பொய்யை கூறி, ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எதிர்க்கட்சித்தலைவர் ராகுலின், இந்த அநாகரிகமான கருத்தை தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 'இண்டியா கூட்டணி'யினர் யாரும் கண்டிக்க முன் வரவில்லை. அதேசமயம், பா.ஜ., கூட்டணி மட்டுமே அனைத்து மதத்தினரையும் மதித்து வருகிறது.
நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்து தர்மத்தையும் ராகுல் அவமானப்படுத்தியதை அனைத்து எதிர்க்கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை, இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.