/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக்குகளில் ஊர்வலமாக சென்று பா.ஜ., இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு
/
பைக்குகளில் ஊர்வலமாக சென்று பா.ஜ., இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு
பைக்குகளில் ஊர்வலமாக சென்று பா.ஜ., இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு
பைக்குகளில் ஊர்வலமாக சென்று பா.ஜ., இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 18, 2024 05:08 AM

புதுச்சேரி : பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமையில் பைக்குகளில் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
புதுச்சேரியில் பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று லாஸ்பேட்டை பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக பைக்குகளில் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
வழி நெடுக்கிலும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி கூறுகையில், 'மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியிலும், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான பா.ஜ., - என்.ஆர் காங்., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் ஏழை மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளது. மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.
நமச்சிவாயம் வெற்றி பெற்றதால், அதிக நிதி கொண்டு வருவதுடன் மாநில வளர்ச்சியும் சாத்தியமாகும். எனவே பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்' என்றார்.

