/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பா.ஜ., வினர் ரங்கசாமிக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்'
/
'பா.ஜ., வினர் ரங்கசாமிக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்'
'பா.ஜ., வினர் ரங்கசாமிக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்'
'பா.ஜ., வினர் ரங்கசாமிக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்'
ADDED : ஏப் 03, 2024 03:16 AM
புதுச்சேரி : காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மடுகரையில் நடந்தது.
கூட்டத்தில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:
பிரதமர் மோடி, இதுவரை எந்த நல்லதையும் நாட்டு மக்களுக்கு செய்யவில்லை. தமிழகத்தில் வெள்ளம் வந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது அவர் வரவில்லை. அரசுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை.
பொதுவாக பா.ஜ.,வின் வேலையே, எந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறோமோ, அந்த கட்சிக்கு தீமை விளைவிப்பது தான். புதுச்சேரியில், பா.ஜ., வெற்றி பெற்றால், அவர்கள் ரங்கசாமிக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். அவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும் அல்லது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பார்ப்பார்கள்.இது பா.ஜ.,விற்கு புதிது கிடையாது. பல மாநிலங்களில், இந்த வேலையை தான் செய்துள்ளனர். பா.ஜ.,வினர் அவர்களுடன் யார் இருக்கிறார்களோ, அவர்களை தான் முதலில் அடிப்பார்கள். தமிழகத்தில், அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்து, அந்த கட்சியை பல துண்டுகளாக உடைத்து விட்டனர். அங்கு தற்போது நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என, சொல்லி கொண்டிருக்கின்றனர்.

