/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புற வழிச்சாலை பணிகளால் கிராம சாலைகளில் போக்குவரத்து தடை
/
புற வழிச்சாலை பணிகளால் கிராம சாலைகளில் போக்குவரத்து தடை
புற வழிச்சாலை பணிகளால் கிராம சாலைகளில் போக்குவரத்து தடை
புற வழிச்சாலை பணிகளால் கிராம சாலைகளில் போக்குவரத்து தடை
ADDED : மார் 22, 2024 05:45 AM

பாகூர் : விழுப்புரம் - நாகப்பட்டினம் புற வழிச்சாலை பணிகளால் கிராம சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால், பாகூர் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பாகூரில் இருந்து சார்காசிமேடு வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையின் குறுக்கே புறவழிச்சாலை குறுக்கிடுவதால், இதில், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள மண்மேட்டில் ஏறி அதன் வழியாக வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பாகூர் - பரிக்கல்பட்டு சாலையிலும் இதே பிரச்னை உள்ளதால், 100 மீட்டர் துாரத்தை கடப்பதற்கு, சர்வீஸ் சாலை வழியாக சுமார் 2 கி.மீ., துாரம் சென்று மேம்பாலத்தின் கீழ், பகுதி வழியாக செல்ல வேண்டி உள்ளது.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனங்கள் செல்ல காலதாமம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. வயல்வெளியின் நடுவே புறவழிச்சாலை செல்வதால், எதிரே உள்ள நிலத்திற்கு செல்ல விவசாயிகள் பல கி.மீ., துாரம் சுற்றி செல்கின்றனர். சேலியமேடு, ஆதிங்கப்பட்டு, குடியிருப்புபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இணைப்பு சாலைகள் அனைத்தும் மூடப்படும் நிலை உள்ளது.
புறவழிச் சாலை பணியால், கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்படுத்தி வருவதற்கு, பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என, எச்சரித்துள்ளனர்.

