/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் மிதந்த பெண் ஊழியர் சடலம்
/
ஆற்றில் மிதந்த பெண் ஊழியர் சடலம்
ADDED : மார் 10, 2025 06:13 AM
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் ஆற்றில் தனியார் மருத்துவமனை ஊழியர் சடலம் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் ஆற்று பாலம் அருகே தண்ணீரில் இறந்த நிலையில், பெண் சடலம் ஒன்று நேற்று மிதந்தது.
தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண் சடலத்தை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பெரியார் நகர் ஏழுமலை மனைவி நிர்மலா, 55; என்பதும், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில், துாய்மை பணியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்தது.
கடந்த 3 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நிர்மலா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா என விசாரிக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.