தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி


ADDED : பிப் 23, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அருகே மணிலா பிடுங்கும் இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.

புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல். விவசாயி; இவர் தனது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார்.

அதனை பிடுங்குவதற்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மணிலா பிடுங்கும் இயந்திரத்தை எடுத்து சென்றார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் ஹரிஷ், 9; சித்திரவேல் மகன் சித்தார்த், 13; இருவரும் மணிலா பிடுங்கும் இயந்திரத்தின் மேல் அமர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சித்தார்த்திற்கு காலில் முறிவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us