/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாடியில் இருந்து தள்ளப்பட்ட வாலிபர்: காரைக்காலில் பயங்கரம்
/
மாடியில் இருந்து தள்ளப்பட்ட வாலிபர்: காரைக்காலில் பயங்கரம்
மாடியில் இருந்து தள்ளப்பட்ட வாலிபர்: காரைக்காலில் பயங்கரம்
மாடியில் இருந்து தள்ளப்பட்ட வாலிபர்: காரைக்காலில் பயங்கரம்
ADDED : மே 05, 2024 03:41 AM
காரைக்கால் : காரைக்காலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால், தியாகராஜர் வீதி, ஜகபர் காலனியைச் சேர்ந்தவர் கணபதி மகன் தினேஷ், 21; மாதா கோவில் வீதியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காமராஜர் சாலையில் உள்ள நண்பர் சிவனேசனுடன் முதல் மாடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதன் மகன் தினேஷ், 28, என்பவர், சிவனேசனை பார்த்து இவன் யார் என கேட்டபோது தினேஷ் நண்பர் என்று கூறியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சிவனேசனை தினேஷ் தாக்கினார். தடுக்க முயன்ற கணபதி மகன் தினேைஷ முதல் மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டார். படுகாயம் அடைந்த தினேைஷ உறவினர்கள், நண்பர்கள் மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து மாடியிலிருந்து தள்ளிவிட்ட தினேைஷ தேடி வருகின்றனர்.