ADDED : ஆக 05, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கடையில் வேலை செய்த 15 வயது சிறுவனை புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தினர் மீட்டனர்.
புதுச்சேரி, சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள எலக்ட்ரிக்கல்ஸ் கடையில் சிறுவன் வேலை செய்வதாக, குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கு நேற்று தகவல் வந்தது. ஆணைய தலைவர் சிவராமன் தலைமையிலான ஊழியர்கள் திடீரென கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த 15 வயது சிறுவனை குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மீட்ட குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தினர், குழந்தைகள் நலக் குழுவிடம் ஆஜர்படுத்தினர். பின், சிறுவன் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
