தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்


UPDATED : ஜூன் 20, 2026 07:20 PM

ADDED : ஜூன் 20, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 07:20 PM ADDED : ஜூன் 20, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் ஆனி மாத 10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி, ஜூன் 19 மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடந்தது. நேற்று காலை பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., உட்பட திரளானோர் பங்கேற்றனர். விழாவில், தினமும் இரவு சாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 28ம் தேதி தேரோட்டம், 29ம் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்ப உற்சவம், 30ம் தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் ரிஷப வாகனத்தில் 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us