/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரொட்டி,பால் ஊழியர்கள் 3ம் நாளாக வேலை நிறுத்தம்
/
ரொட்டி,பால் ஊழியர்கள் 3ம் நாளாக வேலை நிறுத்தம்
ADDED : மார் 06, 2025 04:12 AM

புதுச்சேரி: உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்க வலியுறுத்தி, ரொட்டிப்பால் ஊழியர்கள், கல்வித்துறை முன்பு 3வது நாளாக நேற்று கண்களை கட்டிக்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கல்வித்துறையில் கடந்த 2003ம் ஆண்டு ரொட்டி பால் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்காக 950 ஊழியர்கள் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தபட்டனர். சம்பளத்தை உயர்த்தி வழங்க பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கடந்த 2023ம் ஆண்டு ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு சம்பளம் 10 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் கடந்தும் உயர்த்தப்பட்ட ஊதியம் இதுவரை வழங்கவில்லை.
உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கக்கோரி நேற்று 3வது நாளாக ரொட்டி பால் ஊழியர்கள் கல்வித்துறை முன்பு கண்களை கட்டிக் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். 350க்கும் மேற்பட்ட ரொட்டிப்பால் ஊழியர்கள் பங்கேற்றனர்.