ADDED : ஜூலை 01, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த கொத்தனார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம், சுப்பையா நகரை சேர்ந்தவர் ரவி, 42; கொத்தனார். முதுகெலும்பு சவ்வு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதுகு வலி காரணமாக பல மாதங்கள் இரவில் துாக்கமின்றி அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், மருந்துகள் சாப்பிட்டும், வலி குறையாமல் இருந்ததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
