தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., கிராமப்புற பைபர் திட்டம் அறிமுகம் 

பி.எஸ்.என்.எல்., கிராமப்புற பைபர் திட்டம் அறிமுகம் 

பி.எஸ்.என்.எல்., கிராமப்புற பைபர் திட்டம் அறிமுகம் 


ADDED : ஜூலை 18, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல். ரூ.259ல் புதிய கிராமப்புற பைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

இந்தியாவின் கிராமப்புறங்களில் மலிவான விலையில் அதிவேக இணைய வசதியை வழங்க பி.எஸ்.என்.எல்., ரூ. 259க்கு கிராமப்புற பைபர் நுழைவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் கிராமப்புற வீடுகளுக்கு அதிவேக பைபர்–டு–தி–ஹோம் (எப்.டி.டி.எச்) பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இதன் மூலம் வீட்டிலேயே அதிவேக வை–பை இணையதள வசதியை பெற முடியும்.

பி.எஸ்.என்.எல்., கீழ் அமைக்கப்பட்ட பாரத் நெட் திட்டத்தின் மூலம் புதுச்சேரி உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இணைப்பை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் http://ruralftth.bsnl.in என்ற இணையதளத்தில் விவரங்களை உள்ளிட்டு மிக எளிய முறையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

மேலும், தகவல்களுக்கு 1800 4444 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். அதே எண்ணிற்கு ‘hi’ என, வாட்ஸ் அப் அல்லது மெயின் தொலைபேசி நிலைய வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.

கிராமப்புற பைபர் எப்.டி.டி.எச். திட்டத்தில் மாதம் 700 ஜிபி அதிவேக டேட்டா, இந்தியா முழுதும் வரம்பற்ற இலவச தொலைபேசி அழைப்புகள், இலவச ONT/மோடம் மற்றும் இன்ஸ்டலேஷன், இலவச ‘waves ott’ சந்தா வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us