ADDED : ஜூலை 18, 2026 08:45 PM
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியின் 4வது பட்டமளிப்பு விழா நடந்தது.
வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன், நிறுவனர் ராதா ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., பங்கேற்று பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, வாழ்த்தினார்.
கல்லுாரி துணை முதல்வர் ஜெயராமன் பட்டதாரிகளுக்கான உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழாவில் கல்லுாரி நிர்வாக இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா, செயல் இயக்குநர் மவுஷ்மி, முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்விக் குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். இயந்திரவியல் துறைத் தலைவர் மகிமைராஜ் நன்றி கூறினார்.
