/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களின் நலனுக்கான பட்ஜெட்: அ.தி.மு.க., கருத்து
/
மக்களின் நலனுக்கான பட்ஜெட்: அ.தி.மு.க., கருத்து
ADDED : மார் 13, 2025 06:32 AM
புதுச்சேரி: பட்ஜெட் குறித்த புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
இந்தாண்டு பட்ஜெட் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறும் மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாகும். 10 ஆண்டுகளுக்கு மேல் உயர்த்தப்படாமல் உள்ள நில மதிப்பீட்டு மதிப்பை (ஜி.எல்.ஆர்) உயர்த்தாமல் நில விற்பனையாளர்களுக்கு சாதகமான நிலையை அரசு எடுத்து வருகிறது.
குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆதிதிராவிட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் 500 ரூபாய் உயர்த்தியது போன்று, அனைத்து தரப்பு மக்களுக்கும் 500 உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் அரசின் நிதியுதவியைப் பெற்று பயன்பெறும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டில் ஒருசில குறைகள் இருந்தாலும் அ.தி.மு.க., பட்ஜெட்டை வரவேற்கிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.