/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்
/
சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்
ADDED : ஆக 02, 2024 01:22 AM
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் இன்று காலை 9:00 மணிக்கு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் அமர்வு நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையை துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர்க்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
அதில், 9 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதை தொடர்ந்து மதியம் 12:20 மணிக்கு சபை நடவடிக்கை முடிந்து ஒத்தி வைப்பதாகவும், இன்று காலை 9:00 மணிக்கு சபை துவங்கும் என சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இன்று காலை 9:02 மணிக்கு புதுச்சேரியில் 2024 -- 25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.