/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் மீது பஸ் மோதல் புவனகிரியில் 7பேர் காயம்
/
வீட்டின் மீது பஸ் மோதல் புவனகிரியில் 7பேர் காயம்
ADDED : ஏப் 16, 2024 07:13 AM

புவனகிரி : சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை சேத்தியாத்தோப்பிற்கு அரசு பஸ் புறப்பட்டது. புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் மாதா கோவில் அருகில் சென்றபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி, அவ்வழியே வந்த பைக் மீது மோதி, அருகில் இருந்த வீட்டில் மோதி நின்றது.
அதில் வீட்டின் சுவர் இடித்து விழுந்ததில், வீட்டிற்குள் இருந்த ராஜேந்திரன் மனைவி ரேவதி,50; பக்கத்து வீடுகளை சேர்ந்த சிறுவர்கள் தட்சணா,6; சாந்திவாசன்,6; சர்ஷன்,5; மற்றும் பாலாஜி, 23; மற்றும் பைக்கில் வந்த இருவர் என மொத்தம் 7 பேர் காயமடைந்தனர்.
அவர்களை புவனகிரி போலீசார் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

