ADDED : ஜூன் 06, 2026 10:14 PM
கள்ளக்குறிச்சி: மதுபோதையில் அரசு பஸ்சை, தாறுமாறாக ஓட்டிய டிரைவர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்தவர் சதீஷ்குமார், 42; டிரைவர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் நயினார்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் நோக்கி சென்றார். அப்போது சதீஷ்குமார் மதுபோதையில் பஸ்சை தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் சத்தம் போட்டனர். இதனால், பஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாற்று டிரைவர் மூலம் அரசு பஸ் சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் சதீஷ்குமார், அவருடன் பணியில் இருந்த கண்டெக்டர் ராமச்சந்திரன், பஸ் நிலைய நேரக்காப்பாளர் செந்தில்குமார் ஆகிய மூவரிடமும் சின்னசேலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் தவமணி விசாரணை நடத்தினார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பஸ் டிரைவர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், கண்டெக்டர் ராமச்சந்திரன், நேரக்காப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் 2 நாட்கள் மட்டும் சஸ்பெண்ட் செய்து, போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.
