/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிறுத்த விரிவாக்கம்; கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
பஸ் நிறுத்த விரிவாக்கம்; கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு
பஸ் நிறுத்த விரிவாக்கம்; கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு
பஸ் நிறுத்த விரிவாக்கம்; கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 27, 2025 07:23 AM

புதுச்சேரி; பாரதிதாசன் மகளிர் கல்லுாரி வளாகத்தில், பஸ் நிறுத்த விரிவாக்கம் மேற்கொள்வது தொடர்பாக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.
முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, கல்லுாரி அருகே, பொதுப்பணித்துறை மூலம், புதிதாக பஸ் நிறுத்தம் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் துவங்க உள்ளது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க, பஸ் நிறுத்தத்தை கல்லுாரி வளாகத்தின் உட்புறம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., நேற்று கல்லுாரி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, போக்குவரத்து எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.