/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அறிவியல் திறனறி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
/
தேசிய அறிவியல் திறனறி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
தேசிய அறிவியல் திறனறி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
தேசிய அறிவியல் திறனறி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 31, 2024 02:37 AM
புதுச்சேரி: இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய அறிவியல் திறனறி தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விஞ்ஞாண பாரதி, என்.சி. இ.ஆர்.டி., இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.
அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தோ, அல்லது வீட்டில் இருந்தவாறே, ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் மற்றும் கணிணி மூலம் பங்கேற்கலாம்.
இந்தியா முழுவதும் இத்தேர்வானது வரும், அக். 23,ம் தேதி மற்றும் அக். 27,ம் தேதி ஆகிய இரு தினங்களில், இணைய வழியில் நடக்க உள்ளது.
தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, அறிவியல் அறிஞர்களுடன் அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைந்து தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்வதற்கு வழிகாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.vvm.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை பெற வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கத்தை, 9894926925 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.