/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேலோ இந்தியா ஓபன் தேர்வில் பங்கேற்க டேக்வோண்டோ வீராங்கனைகளுக்கு அழைப்பு
/
கேலோ இந்தியா ஓபன் தேர்வில் பங்கேற்க டேக்வோண்டோ வீராங்கனைகளுக்கு அழைப்பு
கேலோ இந்தியா ஓபன் தேர்வில் பங்கேற்க டேக்வோண்டோ வீராங்கனைகளுக்கு அழைப்பு
கேலோ இந்தியா ஓபன் தேர்வில் பங்கேற்க டேக்வோண்டோ வீராங்கனைகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 31, 2024 02:30 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்பதற்கான ஓபன் தேர்வில் பங்கேற்க, டேக்டோண்டோ வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி டேக்வோண்டோ விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் மஞ்சுநாதன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு, திண்டுக்கல் பகுதியில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டி வரும், 11,ம் தேதி துவங்கி, 14,ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான வீராங்கனைகளை தேர்ந்தெடுப்பதற்கான, ஓபன் தேர்வு வரும், செப்., 1ம் தேதி, மேஜிக் லீக் டேக்வோண்டா, மார்ஷல் ஆர்ட்ஸ் கிளப்பில் நடக்கிறது.
இதில் புதுச்சேரி டேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தால் கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கு தேர்வுகள் வீராங்கனைகளுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. விருப்பம் உள்ள, புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த டேக்வோண்டோ வீராங்கனைகள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வு பெறும் வீராங்கனைகள், திண்டுக்கல்லில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால், தங்கப்பதக்கம் ரூ.7 ஆயிரம்; வெள்ளிப்பதக்கம் ரூ.5 ஆயிரம்; வெண்கல பதக்கம் ரூ.3 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
மேலும் இதில் வெற்றி பெற்ற வீராங்கனையர், டேக்வோண்டா பெடரேஷன் ஆப் இந்தியாவால் நடத்தப்படும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்வர்.
இதன் மூலம் வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கான அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.