/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய சிம்களை 4ஜியாக மாற்றிக் கொள்ள பி.எஸ்.என்.எல்., அழைப்பு
/
பழைய சிம்களை 4ஜியாக மாற்றிக் கொள்ள பி.எஸ்.என்.எல்., அழைப்பு
பழைய சிம்களை 4ஜியாக மாற்றிக் கொள்ள பி.எஸ்.என்.எல்., அழைப்பு
பழைய சிம்களை 4ஜியாக மாற்றிக் கொள்ள பி.எஸ்.என்.எல்., அழைப்பு
ADDED : ஆக 06, 2024 07:14 AM
புதுச்சேரி : புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4ஜி சேவையை இம்மாதத்தில் துவங்க உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றது.
இதனையொட்டி பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை மாற்றி புதிய 4ஜி சிம் கார்டாக இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தினை அணுகலாம்.
அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் காமராஜர் நகர் சாணக்கியா கம்யூனிகேஷன், அரும்பார்த்தபுரம் வில்லியனுார் மெயின்ரோடு நித்திய ஸ்ரீ ஏஜென்சிகளை நேரில் அணுகலாம்.
மேலும் மேளா நடக்கும் தவளக்குப்பம், கரியமாணிக்கம் சந்திப்பு, ஏம்பலம், வில்லியனுார், நடேசன் நகர், முதலியார்பேட்டை இடங்களில் புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.
இதனுடன் 4ஜி.பி., இலவச டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். புதுச்சேரி, வில்லியனுார் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுகிழமையும் இயங்கும் என பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.