காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டப்படும். காவேரி ஆற்றின் கடைமடை பகுதியில் உள்ள காரைக்காலில் அரசலாறு, வாஞ்சியாறு, திருமலைராயனாறு ஆகிய ஆறு கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, புதுமண தம்பதிகள் புத்தாடைகள் அணிந்து காவிரி ஆற்றை வணங்கி, சூரிய பூஜைகள் செய்து தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். பின் புது தாலிக்கயிறும் மாற்றிக் கொண்டனர்.
பெண்கள் ஆற்றங்கரையில் விளக்கு ஏற்றி, தேங்காய், பழங்கள், பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து காவேரி தாயை வணங்கினர். ஆடிப்பெருக்கு விழாவில் ஏராளமானோர் வழிப்பட்டனர்.