/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசார அனுமதி விபரங்கள்: தேர்தல் துறை வெளியீடு
/
பிரசார அனுமதி விபரங்கள்: தேர்தல் துறை வெளியீடு
ADDED : ஏப் 17, 2024 11:53 PM
புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் தேர்தல் பிரசார அனுமதி தரப்பட்டது குறித்த விபரங்களை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெற்ற சூழ்நிலையில், பிரசார அனுமதி தரப்பட்டது தொடர்பான விபரங்களை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.
மாநில தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநிலத்தில் பிரசார தொடர்பாக புதுச்சேரியில் -439, காரைக்காலில்-108 விண்ணப்பங்கள் வந்தன. இதில் புதுச்சேரி 406 விண்ணப்பங்கள், காரைக்காலில் 79 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொண்டு பிரசாரத்திற்கு அனுமதி தரப்பட்டது. பல்வேறு காரணங்களால் புதுச்சேரியில்-33, காரைக்கால்-29 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
புதுச்சேரியினை பொருத்தவரை வீடு வீடாக பிரசாரம் செய்ய 31 பேருக்கும், தற்காலிகமாக கட்சி அலுவலகம் அமைக்க 22 பேருக்கும், பொதுகூட்டங்கள் ஒலிபெருக்கிக்கு 69 பேருக்கும், தெருமுனை பிரசாரத்திற்கு 38 பேருக்கும், பேரணியாக செல்ல 84 பேருக்கும், தேர்தல் பிரசாரமாக வாகனங்களை பயன்பதுத்த 159 பேருக்கும் அனுமதி தரப்பட்டது.

