/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பெங்களூருவில் பிரசாரம்
/
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பெங்களூருவில் பிரசாரம்
ADDED : ஏப் 23, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் வரும் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதையொட்டி, புதுச்சேரி மாநில காலாப்பட்டு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், கர்நாடக மாநிலம் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதில், கர்நாடக மாநில சிக்பேட் தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., உதய கருடாச்சார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

