ADDED : மார் 08, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ரொட்டி பால் ஊழியர்கள் நேற்று மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமையில் ஊழியர்கள் அனைவரும் கல்வித்துறை அலுவலகம் முன், அமர்ந்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.