/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மே 03, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், கஞ்சா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.
சுத்துக்கேணி அம்பேத்கர் சிலை அருகே நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கி கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
மேலும், இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில், பங்கேற்ற இளைஞர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.