/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடுப்பு கட்டை மீது கார் மோதல்: 5 பேர் காயம்
/
தடுப்பு கட்டை மீது கார் மோதல்: 5 பேர் காயம்
ADDED : மே 15, 2024 12:51 AM

பாகூர் : சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் 43; கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அருள்ஜோதி, 35; மகன் சஞ்ஜெய், 8; மற்றும் சகோதரர் பாலசுப்ரமணியன் 47; அவரது மனைவி சுந்தரி, 45; ஆகியோருடன் கியா சோனட் காரில் டி.என். 06 ஏ.எப் 5090 கடலுார் நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.
பாலமுருகன் காரை ஓட்டிச் சென்றார். தவளக்குப்பம் அருகே சென்ற போது, பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர் திடீரென சாலையின் குறுக்கே சென்றார்.
அவர் மீது மோதாமல் இருக்க பாலமுருகன் காரை பிரேக் அடித்தார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

