/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்ட விரோத பேனர்கள் வைத்த 12 பேர் மீது வழக்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி
/
சட்ட விரோத பேனர்கள் வைத்த 12 பேர் மீது வழக்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி
சட்ட விரோத பேனர்கள் வைத்த 12 பேர் மீது வழக்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி
சட்ட விரோத பேனர்கள் வைத்த 12 பேர் மீது வழக்கு: மாவட்ட நிர்வாகம் அதிரடி
ADDED : ஜூன் 19, 2024 05:22 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் சட்ட விரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்டுகள் வைத்த, 12 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சப் -கலெக்டர்அர்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகரின் பல இடங்களில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சட்ட விரோதமாக விளம்பர பலகை மற்றும் பதாகைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதனால், நேற்று வில்லியனுார் சாலை, வழுதாவூர் சாலை, திண்டிவனம் பைபாஸ் சாலை, இ.சி.ஆர் சாலை, கடலுார் சாலை, ஆகிய பல சாலைகளில், சட்ட விரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், 'கட் அவுட்டு'கள், அமைத்தவர்கள் மீது, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற கடுமையான நடவடிக்கை இனிமேல், மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து சட்ட விரோத விளம்பர பலகை மற்றும் பதாகைகளுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அதனால் அப்பாவி மக்களின், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், இச்செயலை புதுச்சேரி பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
சாலைகள் மற்றும் நடைபாதைகள் பாதசாரிகளுக்கும், போக்குவரத்து விதிகளை கவனமாக பின்பற்றும் பயணிகளுக்கும், சொந்தமானது.
அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி, பொது சாலைகள், நடைபாதைகள் மற்றும் சந்திப்புகளில், விளம்பர பலகை அமைக்கவோ, அல்லது பதாகைகளை வைக்கவோ, எந்த ஒரு தனி நருபக்கும் அல்லது குழுவிற்கும் எந்த உரிமையையும் கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.