/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
/
பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 20, 2024 04:46 AM
புதுச்சேரி, : பள்ளி மாணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன், ரத்தினவேல் பாண்டியன், 18; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். இவர் கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டு கடந்த 17ம் புதுச்சேரிக்கு ரயிலில் வந்தார். ரயில் நிலையம் முன், தனது தந்தைக்காக காத்திருந்தார்.
அங்கு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த, ஆட்டோ டிரைவர்கள் வம்பாகீரப்பாளையம் கலியமூர்த்தி, வாணரப்பேட்டை தேவா உட்பட 4 பேர் சேர்ந்து, மாணவர், ரத்தினவேல் பாண்டியனிடம், ஆட்டோவில், ஏறவில்லை என்றால் இங்கு நிற்க கூடாது, என கூறினார். அதை மீறி நின்ற, மாணவரை, 4 பேரும் சேர்ந்து, கல்லால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ரத்தினவேல் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.