/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரியாணியில் கரப்பான் பூச்சி ஓட்டல் மீது வழக்கு
/
பிரியாணியில் கரப்பான் பூச்சி ஓட்டல் மீது வழக்கு
ADDED : ஏப் 05, 2024 05:33 AM
புதுச்சேரி: சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக ஓட்டல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். உழவர்கரை சிவசக்தி நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரராகு மனைவி பிரபாதேவி, 36; பா.ஜ., கட்சி நிர்வாகி. கடந்த 31ம் தேதி முத்தியால்பேட்டையில் நடந்த பா.ஜ. பிரசாரத்தில் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பினர். அவருடன் உருளையன்பேட்டை பிரியா, 40; பூமியான்பேட்டை கோமதி, 44; ஆகியோருடன் இணைந்து,நுாறடிச்சாலையில் உள்ள ஓட்டலில் இரவு 10:30 மணிக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
சிக்கன் பிரியாணியில் செத்துப்போன கரப்பான் பூச்சி கிடந்தது. இதனால் பிரபாதேவி, பிரியா, கோமதி ஆகியோர் வாந்தி எடுத்தனர். சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடப்பது தொடர்பாக,ஓட்டல் மேலாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக பிரபாதேவி அளித்த புகாரின்பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார்,கெட்டுபோன உணவுகளை விற்பனை செய்தல் 273 பிரிவின் கீழ் ஓட்டல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

