/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபர்களை தாக்கிய விவகாரம் பெண் உதவி சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பெண் உதவி சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

ADDED : மார் 25, 2024 05:12 AM
பாகூர்: கெட்டுபோன உணவு வழங்கியதை தட்டிக்கேட்ட வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உதவி சப் இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் 30. இவரது நண்பர் கார்த்திகேயன் என்பவர், கடந்த 22ம் தேதி பாகூரில் உள்ள திவ்யா என்ற ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்தார். அந்த உணவை இருவரும் சாப்பிட்டபோது, அது கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. ஓட்டலுக்கு சென்ற நிரஞ்சன், அங்கிருந்த பெண்ணிடம் உணவு கெட்டுப்போய் இருப்பது குறித்து கேட்டனர்.
அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அப்பெண், தோசை கரண்டி மற்றும் அடுப்பில் இருந்த கட்டையால் நிரஞ்சன மற்றும் கார்த்திகேயனை தாக்கினார்.
காயமடைந்த நிரஞ்சன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதனிடையே, தன்னை தாக்கிய பெண் புதுச்சேரி போலீசில் உதவி சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி என்பது நிரஞ்சனுக்கு தெரியவந்தது.
இது குறித்து நிரஞ்சன், பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், 294 பி, 324, 506 (2) ஆகிய பிரிவின் கீழ், உதவி சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், பெண் உதவி சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில், 294, 323, 354 ஆகிய பிரிவுகளின் கீழ் நிரஞ்சன் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.