/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார் உரிமையாளரை தாக்கியவர் மீது வழக்கு
/
பார் உரிமையாளரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் அருகே தனியார் மது பார் நடத்தி வருபவர் ரவி. இவரது மது பாரில், காசாளராக முதலியார்பேட்டை வள்ளலார் வீதியை சேர்ந்த உதயராஜா, 45, என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவரிடம் பார் விற்பனை கணக்கு வழக்கு குறித்து பாரின் உரிமையாளர் கேட்டார். அதற்கு பிறகு பதில் சொல்வதாக கூறி விட்டு சென்றார்.
நேற்று ரவி, அரியாங்குப்பம் வழியாக வந்தார். அவரை, உதயராஜா வழிமறித்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், உதயராஜா மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.