/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியவரிடம் ரூ.15.50 லட்சம் மோசடி மயிலம் ஆசாமி மீது வழக்கு
/
முதியவரிடம் ரூ.15.50 லட்சம் மோசடி மயிலம் ஆசாமி மீது வழக்கு
முதியவரிடம் ரூ.15.50 லட்சம் மோசடி மயிலம் ஆசாமி மீது வழக்கு
முதியவரிடம் ரூ.15.50 லட்சம் மோசடி மயிலம் ஆசாமி மீது வழக்கு
ADDED : மே 10, 2024 01:32 AM
புதுச்சேரி: முதியவரிடம் ரூ. 15.50 லட்சம் பெற்று திருப்பித்தராமல் ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பழைய சாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன், 70; இவர் புதுச்சேரியில் சொந்தமாக உணவு விடுதி நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான திண்டிவனம் அடுத்த மைலம் பகுதியை சேர்ந்த லெனின்.
இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும் கூறி, குழந்தைகள் படிப்பு செலவிற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜசேகனிடம் 7 லட்சம் ரூபாயை, இரண்டு தவணையாக பெற்றுச் சென்றார்.
ராஜசேகர் கொடுத்த பணத்தை பல முறை கேட்டும் லெனின் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ராஜசேகரன் , லெனின் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து, பிரச்னையில் சிக்கி கொண்டாத லெனின், ராஜசேகரனிடம் பேசி மேலும் அவரிடம் 8.50 லட்சம் ரூபாயை நைனார்மண்டபத்தில் உள்ள ராஜசேகரின் நண்பர் வீட்டிற்கு வந்து வாங்கியுள்ளார். பணம் வாங்கியதற்கான செக்யூரிட்டியாக அவரது வீட்டு பத்திரத்தை கொடுத்தார்.
கொடுத்த பணத்தை ராஜசேகர் கேட்ட போது, லெனின் பணத்தை திருப்பி தராமல் மீண்டும் காலம் கடத்தினார். இடத்தின் பத்திரத்தை பற்றி விசாரித்ததில், அந்த இடம் 2 லட்சத்திற்கு மேல் மதிப்பு கிடையாது எனத் தெரியவந்தது.
இதுபற்றி, கேட்டதற்கு, ராஜசேகரனை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, ராஜசேகரன் புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் லெனின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.