/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாசிக் இடத்தை சொந்தம் கொண்டாடியவர் மீது வழக்கு
/
பாசிக் இடத்தை சொந்தம் கொண்டாடியவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2024 04:35 AM
புதுச்சேரி : இ.சி.ஆரில் பாசிக் இடத்தின் மதில் சுவர் நுழைவு வாயிலை இடித்து சொந்தம் கொண்டாடிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இ.சி.ஆர் சிவாஜி சிலை அருகில் உள்ள இடம், பாசிக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அங்கு இயங்கி வந்த பாசிக் வசந்தம் தோட்டக்கலை விற்பனை நிலையத்தின் தடுப்பு சுவரை உடைத்து 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அழகு செடிகள், பூச்செடிகள், பழமரக்கன்றுகள், ஜாடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
பொதுப்பணித்துறை, பாசிக் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர், ரஞ்சித்குமார் என்பவர் பாசிக் இடத்தின் மதில் சுவரை இடித்தது தெரியவந்தது.
ரஞ்சித்குமாரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய இடம் என தெரிவித்தார்.
இதனால் பொதுப்பணித்துறை, பாசிக், போலீசார் மற்றும் ரஞ்சித்குமார் முன்னிலையில், பாசிக் நிறுவனத்தின் நிலம், நில அளவைத்துறை மூலம் மறு அளவீடு செய்யப்பட்டது.
அதில், சம்பந்தப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமான இடம் என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பாசிக் தோட்டக்கலை பிரிவு நல்லதம்பி அளித்த புகாரின்பேரில், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பாசிக் பொருட்களையும், ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள சுற்று மதில் சுவர், நுழைவு வாயில் கதவு, டாய்லெட் பிளாக் சேதப்படுத்தியதாக ரஞ்சித்குமார் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.