/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனை மரம் வெட்டியவர்கள் மீது வழக்கு
/
பனை மரம் வெட்டியவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 07, 2024 07:01 AM
பாகூர் : பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் இருந்த மரங்களை கடந்த சில நாட்களுக்கு முன், மர்ம நபர்கள் வெட்டினர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த இரண்டு பனை மரங்கள் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து, பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், அனுமதியின்றி மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாகூர் போலீசார், சோரியாங்குப்பத்தை சேர்ந்த தாமோதரன், சம்பத், சாவடி ரகுபதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.