/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளம்பர பலகை வைத்த கடை உரிமையாளர் மீது வழக்கு
/
விளம்பர பலகை வைத்த கடை உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 09:44 PM
பாகூர் : போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பலகை வைத்த கடை உரிமையாளர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறாக பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ரோந்து பணயில் ஈடுபட்ட கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் அய்யனார், கார்த்திகேயன் ஆகியோர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த சிறப்பு அறிக்கையின் தொடர்பாக, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கடை உரிமையாளர் சங்கர்கணேஷ் என்பவர் மீது வழக்குப் பதிந்தனர்.