/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் மீது தாக்குதல் இருவர் மீது வழக்கு
/
பெண் மீது தாக்குதல் இருவர் மீது வழக்கு
ADDED : மே 20, 2024 04:03 AM
காரைக்கால் : காரைக்காலில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஆபாசமாக பேசி பெண்ணை தாக்க்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கணபதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயலெட்சுமி. இவர் நேற்று முன்தினம் தனது மகளுக்கு முடிவெட்டுவதற்கு விஜயலெட்சுமி பியூட்டி பார்லருக்கு சென்றார்.
திருநள்ளாறு பனையடி தெருவை சேர்ந்த ராஜகுமாரி மற்றும் இவரது சகோதரி அஷ்டலட்சுமி இவர்களுக்கும், விஜயலட்சுமிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் நேற்று விஜயலட்சுமியை வழிமறித்து ராஜகுமாரி ,அஷ்டலட்சமி இருவரும் சேர்ந்து திட்டித் தாக்கினர்.
விஜயலட்சுமி புகாரின் பேரில் திருநள்ளார் போலீசார் ராஜகுமாரி, அஷ்டலட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

